மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் 26 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்தும், பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு வருகிற 26-ந்தேதி விசாரிக்கிறது.