மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் 14 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பை பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்த வந்த லாவண்யா என்ற மாணவி கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதனிடையே, மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்ட ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.