சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் தீபம் மருத்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவு தனியார் மருந்துவமனையின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. ஊரக தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தீவிர சிகிச்சை பிரிவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் கட்டாயம் வகுப்புக்கு வர வேண்டும் என்பதில்லை. தீபாவளிக்கு பிறகு வர விரும்பும் மாணவர்கள் வரலாம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என தமிழ்நாட்டில் மொத்தம் 45,000 பள்ளிகள் உள்ளன. அவற்றில் இந்த ஆண்டு 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என தெரிவித்தார்.