Tamilசெய்திகள்

மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 1 ஆம் தேதி கலந்துரையாடுகிறார்

ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேர்வுக்கு தயாராவோம் என்ற நிகழ்ச்சியின் 5-வது பகுதி ஏப்ரல் 1-ம் தேதி காணொஇ வாயிலாக நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் உரையாடவுள்ளார். இதற்காக நடைபெறவுள்ள கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சுமார் 15.7 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

தேர்வை அச்சமின்றி எழுதுவதற்கான வழிவகைகள் குறித்தும், வாழ்க்கையை திருவிழாவாகக் கொண்டாடும் வகையிலும் அதற்கான வழிமுறைகள் குறித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி உரையாடவுள்ளார்.

கடந்த நான்காண்டுகளாக மத்திய கல்வித் துறை அமைச்சகம், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.