மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவு – தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள முடிவு

தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பிளஸ்-2 பெதுத் தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது. இதில் தனியார் பள்ளிகள் தேர்ச்சி 98.70 சதவீதம். அதாவது 2 லட்சத்து 43 ஆயிரத்து 983 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அதில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 824 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 3,161 (1.30 சதவீதம்) மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

இதையடுத்து அனைத்து விதமான தனியார் பள்ளிகளும் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களை அழைத்துப் பேசி, தேர்வுத் துறையால் நடத்தப்பட உள்ள உடனடி துணைத் தேர்வில் பங்கேற்க உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

இது தவிர மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆராய வேண்டும். மேலும் இது சார்ந்த அனைத்து விதமான தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools