Tamilவிளையாட்டு

மாட்ரின் ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு முன்னேறினார் கார்லஸ் அல்காரஸ்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் ரஷியாவின் கரன் கச்சனோவை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)-நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரஷிய வீராங்கனை வெரோனிகா குடெர்மிடோவா 6-4, 0-6, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுக்கு அதிர்ச்சி அளித்து அரை இறுதியை எட்டினார்.