மாட்ரிட் ஓபன் டென்னிஸ் – கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்வை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் பட்டம் வென்றார்.

62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் 6-3, 6-1 என்ற கணக்கில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்வை வீழ்த்தினார்.  19 வயதாகும் அல்காரஸ் தொடர்ந்து 10 போட்டிகளில் வென்றுள்ளார்.

மேலும் மாட்ரிட் இறுதி போட்டிக்குள் நுழைவதற்காக இவர் உலகின் சிறந்த வீரர்களான ரஃபேல் நடால், ஜோகோவிக் ஆகியோரையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools