Tamilசினிமா

மழை பிடிக்காத மனிதன் படத்தின் ராதிகா நடிக்கு கதாப்பாத்திரம் இது தான்

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘இன்ஃபினிட்டி ஃபிலிம்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் ‘தி பாஸ்’ என்ற கதாப்பாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.