இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடக்க இருந்தது.
இந்த நிலையில் வெலிங்டனில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டதால் மழை நின்ற பின் ஆட்டம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.