X

மழையால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது

தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்யும் பணியை மத்திய குழுவினர் தொடங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் அருகே சீத்தப்பட்டியில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

ரணஞ்சே சிங், ஷுபம் கார்க், பால்பாண்டியன் ஆகியோரை கொண்ட மத்திய குழு ஆய்வு செய்கிறது.

மத்திய குழு 2 குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து மதிப்பிடுகிறது. மத்திய குழுவினர் இன்றும் நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.