பிப்ரவரி 9 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான படம் ‘பிரேமலு’. இந்த படம் வெளியான சில வாரங்களில் மக்கள் மனதை வென்றது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி, விஷ்ணுவிஜய் இசையமைத்துள்ளார். மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து மார்ச் 8 ஆம் தேதி வெளியிட்டனர். தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல திரையரங்குகளில் இன்றும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டு இருக்கிறது. உலக அளவில் ‘பாக்ஸ் ஆபிஸ்’ கலெக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரேமலு தமிழ் மொழியிலும் டப் செய்து வெளியாகவுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி இப்படம் தமிழ்நாடு திரையரங்களில் வெளியாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழில் வெளியிடுகிறது. மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் மொழியிலும் பிரேமலு படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.