மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி, தாய்லாந்தின் கோசிட் பெட்பிரதாப்பை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-11, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து கொரியாவைச் சேர்ந் சுங் ஜி ஹியுன்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டில் 11-9 என முன்னிலைப் பெற்றிருந்த சிந்து அதன்பின் 14-16 என பின்தங்கினார். அதன்பின் 18-21 என முதல் செட்டை இழந்தார்.
2-வது செட்டில் பிவி சிந்துவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. 0-5 என தொடக்கத்திலேயே பின்தங்கினார். அதன்பின் 5-10 என பின்தங்கினார். 7-21 என எளிதில் இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.