மறைந்த நடிகர் விவேக்கின் பெயர் சாலை!

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார்.

அதன்பின், சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம்,’மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள் செல்வியின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டி அரசாணை வெளியிட்டுள்ளார் என்று கூறினார். வருகிற மே மாதம் மூன்றாம் தேதி விவேக்கின் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும்’ அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விவேக்கின் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools