X

மறைந்த இளம் நடிகர் டாக்டர்.சேதுராமனின் மனைவிக்கு குழந்தை பிறந்தது

தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 36 வயதே ஆன சேதுராமனுக்கு உமா என்ற மனைவியும், சஹானா என்கிற ஒன்றரை வயது மகளும் உள்ளனர். சேதுராமன் இறந்தபோது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. உமாவுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்தவர்கள் சேதுவே மகன் வடிவில் மீண்டும் பிறந்துள்ளதாகக் கூறி சந்தோஷத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். ‘குட்டி சேது வந்தாச்சு’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சேதுராமனின் மனைவி உமா, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.