மருந்து இறக்குமதிக்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்ட இலங்கை
இலங்கை கடந்த ஆண்டு மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அத்தியாவாசிய மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மருந்து தட்டுப்பாடு மற்றும் காலாவதியான ஊழி மருந்துகளால் மருத்துவமனிகளில் அதிக மரணங்கள் நடந்தன. இதை தொடர்ந்து இலங்கை சுகாதாரத் துறை அவசரகால கொள்முதலுக்கு உத்தரவிட்டது. இது பெரிய அளவிலான ஊழல்களுக்கு வழிவகுத்தது. இது தரமற்ற மருந்துகளை சரியான தர சோதனைகள் இல்லாமல் நுழைய அனுமதித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதை தொடர்ந்து ஊழலைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் அவசரகால மருந்துக் கொள்முதலை நிறுத்துவதோடு, இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் அரசுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.