Tamilசெய்திகள்

மருந்தில்லா மருத்துவத்தை கண்டுபிடித்த டாக்டர்.ஆதி ஜோதி பாபுக்கு உலக சாதனை விருது!

வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன், அப்துல் கலாம் விஷன் இந்தியா மூவ்மெண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு அச்சீவர்ஸ் கான்பரன்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நவம்பர் 12 ஆம் தேதி சனிக்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் காலை 10 மணி முதல்  2 மணி வரை  விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பஞ்சபூத மருத்துவத்தின் கண்டுபிடிப்பாளர் A.G.COSMIC CLINIC & RESEARCH INSTITUTE  நிறுவனத்தின் நிறுவனருமான  டாக்டர். ஆதி ஜோதி பாபு அவர்களுக்கு  இவரது காப்புரிமை பெற்ற மருந்தில்லா மருத்துவ கண்டுபிடிப்பை அங்கீகரித்து உலக சாதனை விருது வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் அமைப்பின் சார்பில்

அதன் சர்வதேச ரெக்கார்ட்ஸ் மேலாளர் கிரிஸ்டோபர் டைலர் கிராஃப்ட் ( USA) மற்றும் அந்த அமைப்பின் ஆசியா பசிபிக் ரெக்கார்ட் அதிகாரி செரிஃபா ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனை விருது வழங்கினார்கள்.

இந்த விழாவில் தலைமை அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஜஸ்டிஸ் மதிவாணன் அவர்களும்,டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் பொன்ராஜ் அவர்களும் கலந்து கொண்டு நமது தமிழக மருத்துவர் உலக அளவில் சாதனை  நிகழ்த்தியதற்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

மேலும் இவ்விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கடேசன் ஹரிஹரன் ஆகியோரும் தலைமை அழைப்பாளர்களாக கலந்து கொண்டும் ,இந்த விழாவில் காவல்துறை துணை ஆணையாளர் ஈஸ்வரன், ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன்,ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையாளர்  ராஜாராம், திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகான், நடிகர்கள் சின்னி ஜெயந்த் ,அருள்மணி, மனோஜ் குமார் , நடிகை அனுகிருஷ்ணா, வழக்கறிஞர்கள் பாலாஜி , நித்யா , குலோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் ஆலோசகர் ஆண்ட்ரூ டைலர் மற்றும் நாமக்கல் எஸ் ஆர் ஜி பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டும் விழாவினை சிறப்பித்தார்கள்.

மேலும் இந்த விழாவில்  அறிவியல் படைப்பாளர்கள் , பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், சமூக சேவைகள் புரிந்த சுமார் 40க்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு சாதனையாளர் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.

இந்த விழா ஏற்பாடுகளை  தமிழ்நாடு அச்சீவர்ஸ் கவுன்சில் சேர்மன் செல்வம் மற்றும் அவரது குழுவினர் மிகச்சிறப்பாக செய்து இருந்தனர்.

பேராசிரியர். Prof. ஆதி ஜோதி பாபு அவர்கனின் கண்டுபிடிப்பான, காப்புரிமை பெற்ற மருந்தில்லா பஞ்ச பூத மருத்துவதின் மூலம் 25 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு வகையான குறுகிய கால , நாள்பட்ட ,குணப்படுத்த முடியாத ,காரணங்கள் தெரியாத ,தீர்வு காணமுடியாத ,பரம்பரை நோய்கள் போன்ற  உடல் ,மனம் ,உயிர் சார்ந்த  சகல நோய்களுக்கு தீர்வு கண்டு குணப்படுத்தி வருகிறார்.

எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாத இந்த பஞ்ச பூத மருத்துவத்தின் மூலம் சுமார்  நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் நோய்களை கண்டறிந்து அவர்களை குணப்படுத்தி உள்ளார்.

இந்த பஞ்சபூத மருத்துவத்தின் சிறப்பு என்னவென்றால் பேராசிரியர். டாக்டர். ஆதி ஜோதி பாபு அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய அரசாங்கத்தில் காப்புரிமை விண்ணப்ப பதிவும்,  PCT என்னும் 152 நாடுகளின் கூட்டமைப்பில் காப்புரிமை விண்ணப் பதிவும் பெறப்பட்டு ,ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அரசாங்கங்களால் காப்புரிமை சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசாங்கத்தால் 23 எமுத்துரிமை சான்றிதழ்களும் , அமெரிக்க அரசாங்கத்தால் 1 எழுத்துரிமை சான்றிதழும் பெறப்பட்டுள்ளது. ஏழு முத்திரை பதிப்புரிமைகளும் பெற்றுள்ளது  என்பதாகும்.

இந்த பஞ்சபூத மருத்துவத்தின் மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த மருத்துவத்தின் மூலம் 2012 வரும் சேலம் வின்ஸ்டர் ஹேஸ்ட்டல் ஹோட்டலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சர்க்கரை நோயாளி ஒருவரின் சர்க்கரை அளவை 15 நிமிடத்தில் 64 mg குறைத்துக் காட்டியதாகும்.

இவருடைய காப்புரிமை பெற்ற மருந்தில்லா மருத்துவ முறைகளுக்காக  ASIA BOOK OF RECORD நிறுவனம் ஏற்கனவே இரணடு முறை ஆசியா அளவில் சான்றிதழ் வழங்கி கௌரவித்து உள்ளது.

மேலும் INDIA BOOK OF RECORDS நிறுவனமானது இவருடைய காப்புரிமை பெற்ற மருந்தில்லா மருத்துவ சேவையை  இரண்டுமுறை  ஆசியா அளவில்  அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியும் , புத்தகத்தில் பதித்தும் உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

பஞ்ச பூத மருத்துவம் :

பஞ்ச பூத மருத்துவத்தில் மனித உடலுடன் தொடர்புடைய பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு காரணமான யாங்,யின் என்னும் ஆண் ,பெண் சக்திகளுக்குறிய பூதங்களுக்குறிய நாடிகளை கண்டுபிடித்து , இந்த ஆண் , பெண் பூத சக்திகளின்  இயக்கத்தால் உருவாகும் பஞ்சபூதங்களையும் மற்றும் ஆறாவது பூதத்தையும் சேர்த்து ஆறு பூதங்களுக்குறிய  நாடிகளையும் கண்டுபிடித்து , ஆறுபூத சுழற்சி விதிகளின் அடிப்படையில் , ஆறுபூத சக்தி ஓட்டப்பாதைகளில் , ஆறுபூத புள்ளிகளை தேர்ந்தெடுத்து  மருத்துவம் பார்க்கும் மருத்துவமுறையே பஞ்சபூத  மருத்துவமாகும்.

இந்த மருத்துவத்தில் யின்,யாங் பூத சக்திகளுக்கு நாடிகள் , பஞ்சபூத மற்றும் ஆறாவது பூதத்திற்கும் சேர்த்து நாடிகள், ஆறுபூதங்களுடன் தொடர்புடைய சக்தி ஓட்டப்பாதைகளுக்கும் நாடிகள் ஆகியவற்றை கண்டுபிடித்து ,மனித உடலில் உள்ள அனைத்து வியர்வை துவாரங்களுமே ஆறுபூதங்களுடன் தொடர்புடையது என்பதையும் , குறைந்த பட்சமாக 14400 பூதபுள்ளிகளை கண்டுபிடித்து  ஆறுபூதங்களுக்குறிய 48 சக்தி ஓட்டப்பாதைகளும் ,முள்ளத்தண்டின் முன்புறமும் ,பின்புறமும் ஏற்கனவே உள்ள மைய சக்தி ஓட்டப்பாதைகளுக்கு அருகில் வலது,இடது முன்புறமும் , பின்புறமும் என்று   பதினாறு விதமான  முள்ளந்தண்டின் மையத்துடன் தொடர்புடைய பாதைகளும் , கைகளில் , கால்களில் , மைய உடல் பகுதியில் என்று முள்ளந்தண்டின் சக்தி ஓட்டப்பாதைகளுடன்  தொடர்புடைய  32  சக்தி ஓட்டப்பாதைகளும் கண்டுபிடிக்கப்பட்டு உச்சி முதல் உள்ளங்கால்கள் வரையிலும் உள்ள சகலத்தையும் ஆறுபூத நாடிகளின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது என்பது  இந்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாகும்.

இவ்வாறு மனித உடலுடன்  தொடர்புடைய   ஆறு பூத சக்திகளை , ஆறு பூத நாடிகள் பரிசோதனை  முறையில் ஆராய்ந்து எந்தெந்த பூத சக்திகள் அதிகமாக உள்ளன ,எந்தெந்த பூத சக்திகள் குறைவாக உள்ளன என்பதை நாடிகள் மூலம் உணர்ந்து  அவற்றிற்குறிய சுழற்சி விதிகளின் அடிப்படையில் அவை  குறுகிய கால , நாள்பட்ட, காரணம் தெரியாத  மற்றும் பரம்பரை நோய்களை குறிக்கின்றதா?  போன்ற அனைத்தையும் மிக துள்ளியமாக கண்டுபிடித்து எந்தெந்த சக்திகளில் , எந்தெந்த சக்தி ஓட்டப்பாதைகளில் பஞ்சபூத மற்றும் ஆறுபூத புள்ளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மிக துள்ளியமாக நாடிகளின் மூலம்  கண்டுபிடித்து  அந்த பூதபுள்ளிகளுக்கு  சிகிச்சை அளித்த பிறகு அவரவர் உடலில் உள்ள நோய்களினால் உண்டான அறிகுறிகளில் உடனடியாக ஏற்படும் மாற்றத்தையும்,நாடிகளில் தோன்றும்  மாற்றத்தையும்  நாடிகள் மூலம் கண்டுணர்ந்து , நாள்பட்ட ,குறுகிய கால ,குணப்படுத்த முடியாத நோய்களை தீர்க்கும்  மருந்தில்லா மருத்துவ முறையே பஞ்சபூத மருத்துவமாகும்.