மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஒராண்டு நீட் தேர்வு எழுத தடை – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்பணத் தொகை வழக்கமாக திருப்பித் தரப்பட மாட்டாது என ஏற்கனவே நடைமுறை உள்ளது. இந்நிலையில், தற்போது கூடுதலாக நீட் தேர்வெழுத ஓராண்டு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கடைசி ரவுண்டில் சீட் எடுத்து சேராவிட்டால் இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news