உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள டெபாய் நகரில் டாக்டர் ஒருவரின் 8 வயது மகன் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போயுள்ளான். இது குறித்து மருத்துவர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையை நடத்தப்பட்டது.சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், டாக்டரின் இரண்டு முன்னாள் ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, குழந்தையை கடத்தல் குறித்து விசாரித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உயிரிழந்த நிலையில் அந்த சிறுவனின் உடல் சதாரி காவல் நிலையப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக டெபாயின் வட்ட அதிகாரி வந்தனா சர்மா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள நிஜாம் மற்றும் ஷாஹித் ஆகியோர் அந்த டாக்டரிடம் கம்பவுண்டர்களாக பணிபுரிந்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை டாக்டர் பணிநீக்கம் செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக குழந்தையைக் கடத்திச் சென்று கொலை செய்ததாக போலீசாரிடம் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.