X

மருத்துவம் சார்ந்த மற்றும் நர்ஸிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு 21 ஆம் தேதி தொடங்குகிறது

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவம் சார்ந்த பி.பார்ம்., நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு 21-ந்தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. சென்னை, கோவையில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இதனால் முக கவசம் கட்டாயம் அணிவதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.