X

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகை குஷ்பு

பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு சமீபத்தில் அடினோவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனக்கு காய்ச்சல், தொண்டை வலி, சோம்பல் ஏற்பட்டுள்ளதால் நல்ல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ரசிகர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை குஷ்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இது குறித்து அவர் தனது இணையப் பக்கத்தில், “மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். சிறிது நாட்களுக்கு பயணங்களை தவிர்க்க வேண்டும். என் உடல்நலம் குறித்த உங்கள் அன்பிற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.