Tamilசெய்திகள்

மரியுபோலின் தலைவிதியை போர் அல்லது ராஜதந்திரம் மூலம் தீர்மானிக்க முடியும் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையேயான போர் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் கடுமையான
சேதங்களை சந்தித்துள்ளது. உக்ரைனுக்கு ரஷியாவிற்கு ஈடு கொடுத்து பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மரியுபோல் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட நகரத்திற்குள் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு எவ்வாறு சிறந்த முறையில் உதவுவது என்பது குறித்து பிரிட்டன்
மற்றும் ஸ்வீடன் தலைவர்களுடன் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார்.

அப்போது, மரியுபோலின் தலைவிதியை போர் அல்லது ராஜதந்திரம் மூலம் தீர்மானிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து உக்ரைன் மக்களுக்கு நேற்று இரவு வெளியிட்ட வீடியோவில் ஜெலன்ஸ்கி பேசியதாவது:-

மரியுபோலில் நிலையை மனிதாபிமானமற்றது. ரஷியா வேண்டுமென்றே அங்குள்ள அனைவரையும் அழிக்க முயற்சிக்கிறது.

எங்களுக்கு ஆதரவு தரும் பல்வேறு நாடுகளும் உக்ரைனுக்கு தேவையான கனரக ஆயுதங்கள், விமானங்கள் மற்றும் மிகைப்படுத்தாமல் உடனடியாக வழங்குகிறார்கள். எனவே, மரியுபோல் மீதான
ஆக்கிரமிப்பாளர்களின் அழுத்தத்தையும், முற்றுகையையும் உடைக்கலாம்.

அல்லது கூட்டாளிகளின் பங்கு தீர்க்கமானதாக இருக்கும்பட்சத்தில் நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் அவ்வாறு செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.