மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை!

சென்னை மாநகராட்சி முழுவதும் முக்கிய சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை நகரில் மரங்களில் விளம்பரங்க்ள் செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விளம்பர தட்டிகள், கம்பிகள், கேபிள் ஒயர்கள் போன்ற தேவையற்ற பொருட்களை அமைக்கக் கூடாது.

விதிகளை மீறுபவர்களுக்கு ரூ .25 ஆயிரம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools