மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் போட்ட திடீர் உத்தரவு

நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.

தற்போது 10, 12-ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17-ஆம் தேதி விஜய் சந்திக்கிறார். அப்பொழுது 10,12-ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் போது பொதுவெளியில் பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது என மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விழாவில் கலந்துகொள்ளும் 5000 பேருக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema