Tamilசெய்திகள்

மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

மராட்டிய வரலாற்றில் மிக முக்கியமானவர் மன்னர் சத்ரபதி சிவாஜி.  மிகப் பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் “இந்திய கடற்படையின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

அவரின் ஹிந்தவி சுயராஜ்ஜிய சித்தாந்தமும், அதன் தொடர்ச்சியாக மராட்டிய பேரரசின் தொடர்ச்சியான விரிவாக்கமும் தற்போதைய மகராஷ்டிர வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மராட்டிய மக்கள் பார்வையில் அவர் மிகப்பெரிய தலைவராக இன்றும் மதிக்கப்படுகிறார்.

மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளான இன்று பிரதமர் மோடி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்பு, இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:-

சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தி அன்று அவருக்கு தலைவணங்குகிறேன். அவரது சிறந்த தலைமைத்துவமும், சமூக நலனுக்காக அவர் அளித்த முக்கியத்துவமும் தலைமுறை தலைமுறையாக மக்களை ஊக்குவிக்கிறது. உண்மை மற்றும் நீதியின் மதிப்புகளுக்காக நிற்கும் போது அவர் சமரசம் செய்ததில்லை. அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.