மன்கட் அவுட் விவகாரம் – பந்து வீச்சாளர்களுக்கு ஸ்ரீநாத் ஆதரவு

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணியின் அஸ்வின் பந்து வீசும்போது ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கிரீஸை விட்டு வெளியே நின்றிருந்தார். அஸ்வின் அவரை மன்கட் முறையில் அவுட் செய்தார். அப்போது இது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் அஸ்வின் டெல்லி அணிக்கு சென்றுள்ளார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மன்கட் அவுட் செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மன்கட் அவுட் என்பது ஐசிசி விதிமுறையில் உள்ளதா? அது கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை அழிப்பதாக உள்ளதாகவும் விவாதம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் கூறுகையில் ‘‘பேட்ஸ்மேன் சாதமாக எடுத்துக்கொண்டு பந்து வீசுவதற்கு முன்னதாகவே கிரீஸை விட்டு வெளியேறினால், அதன்பின் அவர் ரன்அவுட் செய்யப்பட்டால், அதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அது என்னைப் பொறுத்தவரைக்கும் சரியானது’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools