உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.
குறிப்பாக ரஷிய அரசியல் தலைவர்கள் தங்களின் குடும்ப விபரங்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை. அதோடு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களும் வெளியில் கசிவதில்லை. அந்த வகையில் ரஷிய அதிபர் புதின் பற்றியும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்தும் எந்த தகவலும் வெளியில் வந்ததில்லை.
ரஷிய அதிபர் புதினின் மனைவி லியுட்மிலா ஸ்க்ரெப்னோவா. இவர் ஒரு விமான பணிபெண். லியுட்மிலா ஸ்க்ரெப்னோவாவும், புதினும் 1983-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் மரியா வொரேன்ட்சோவா. இவர் மருத்துவதுறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார். மரியா வொரேன்ட்சோவாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் கணவருடன் மாஸ்கோவில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.இரண்டாவது மகள் நடன கலைஞராக உள்ளார்.
புதின் ரஷிய அதிபராக இருந்தாலும் முக்கிய அரசு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மனைவியை அழைத்து வருவார். அது தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் அவர் மனைவியுடன் பங்கேற்பதில்லை.
இந்த நிலையில் புதின் தனது மனைவியை 2013-ல் விவாகரத்து செய்தார். மனைவி மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாததாலும், பொதுவாழ்க்கை காரணமாகவும் விவாகரத்து செய்வதாக அவர் அறிவித்தார்.
ஆனால் புதினின் விவாகரத்துக்கு பின்னணியில் அவர் ரஷிய நாட்டை சேர்ந்த ஒரு ஒலிம்பிக் வீராங்கனையை காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. இந்த தகவலை புதின் மறுத்தார்.அதன்பின்பு இந்த விவகாரம் அப்படியே அமுங்கிபோனது.
இதற்கிடையே புதினுக்கு மூன்றாவதாக ஒரு மகள் இருப்பதாகவும், அவரை புதின் ரகசியமாக வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு கூறப்படும் காரணங்கள் தவிர வெளிவராத பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல புதினின் 3-வது மகள் குறித்தும் பல ரகசிய தகவல்கள் இருப்பதாக தெரிகிறது.