Tamilசெய்திகள்

மனைவியுடன் இளையராஜாவை சந்தித்த பிரேம் ஜி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் பிரேம்ஜி, ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர்.

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரேம்ஜி. பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான அவர் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு சமீபத்தில் திருத்தணியில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு மத்தியில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. பிரேம்ஜியின் திருமணத்தில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவில்லை. இதனால் கங்கை அமரன் குடும்பத்துக்கும், இளையராஜாவுக்கும் ஏதோ பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டது.

இந்நிலையில் பிரேம்ஜி தனது மனைவியுடன் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிரேம்ஜி தனது மனைவியுடன் இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.