மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் – இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், நேற்றிரவு 88 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பெட்டல் மாவட்டத்தில் உள்ள அம்லா தொகுதிக்கான வேட்பாளர் பெயர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. துணை பெண் கலெக்டரான நிஷா என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், ஆளும் பா.ஜனதா அரசு இன்னும் அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் ஒரு இடத்திற்கு மட்டும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பெயரை வெளியிடவில்லை.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்திருந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news