மத்திய பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்து – 12 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் தனியார் பேருந்து சுமார் 30 பேர்களுடன் ஆரோன் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிப்பர் லாரி ஒன்று ஆரோனில் இருந்து குணா பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. குணா-ஆரோன் சாலையில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியது.

மோதிய வேகத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. விபத்து ஏற்பட்டதும் பேருந்தில் இருந்தவர்கள் வெளியே குதித்து தப்பிக்க முயற்சித்தனர். இருந்தபோதிலும் தீ வேகமாக பரவியதாலும், விபத்தில் பஸ் சேதமடைந்து இருந்ததாலும் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் 12 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவர்களது குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி, காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா தனது எக்ஸ் பக்கத்தில் “இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்து குறித்து கேள்விப்ப்பட்டதும் உடனடியாக கலெக்டர் மற்றும் எஸ்.பி.-யை தொடர்பு கொண்டு நிவாரணம் மற்றும் மீட்புப் பணியை தொடங்க உத்தரவிட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news