ராணுவ பெண் அதிகாரிகளுக்கு தலைமை பதவி அளிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ராணுவ பெண் அதிகாரிகள் தலைமை பதவி வகிக்கவோ, நிரந்தர பணி வகிக்கவோ தகுதியற்றவர்கள் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டுள்ளது. ஆண்களை விட அவர்களை தாழ்ந்தவர்கள் என்று சொல்கிறது. இதன்மூலம் பெண்களை அவமரியாதை செய்துள்ளது.
இருப்பினும், இதை எதிர்த்து நின்று, மத்திய அரசு செய்வது தவறு என்று நிரூபித்த பெண்களை நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.