மத்திய அரசு திட்டங்களை அதிக பயனாளிகள் பயன்பெற்ற மாநிலமாக தமிழக அரசு உள்ளது – அமைச்சர் எல்.முருகன் பேட்டி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தாரைவார்த்து கொடுக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது இதை மீட்க பேசி வருகிறார்கள்.

மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு அதில், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடல்பாசி வளர்ப்பதற்காக முதன் முறையாக தமிழகத்தில் சிறப்பு பூங்கா அமைக்கப்பட உள்ளது.

அதற்கான இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து வருகிறது. மேலும் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் மீன் வளத்தை பெருக்க மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு திட்டங்களை அதிக பயனாளிகள் பயன்பெற்ற மாநிலமாக தமிழக அரசு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools