X

மத்திய அரசு ஊடகங்களிடம் பொய் சொல்கிறது – விவசாய சங்க பிரதிநிதிகள் குற்றச்சாட்டு

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்பதில் திட்டவட்டமாக உள்ளது.

என்றாலும் விவசாயிகள் தங்களது போரட்டத்தை கைவிடவில்லை. அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், அதில் விவசாயிகளுக்கு சாதமான வகையில் முன்னேற்றம் ஏதும் இல்லை. இந்த நிலையில் பேச்சுவார்த்தை விவகாரத்தில் மத்திய அரசு பொய் சொல்கிறது என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைட் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவில்லை என்கிறது மத்திய அரசு. ஆனால் மத்திய அரசு  நிபந்தனை பேச்சுவார்த்தையை நடத்த விரும்புகிறது. விவசாயிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கக் கூடாது என்கிறது. அவர்கள் மூன்று சட்டங்களையும் திரும்பப்பெற மாட்டோம் என்கிறார்கள். அதன் அர்த்தம் அவர்கள் ஏற்கனவே ஒப்பந்த அறிக்கையை தயாரித்து விட்டார்கள். அதில் கையெழுத்திட வேண்டும் என விரும்புகிறார்கள்.

இவ்வாறு ராகேஷ் திகைட் தெரிவித்துள்ளார்.