மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 8ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. தற்போது அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து இன்று இரவு சென்னைக்கு புறப்படுகிறார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா குறி வைத்துள்ள தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் ஒன்று. அதற்கு காரணம் பா.ஜனதா தனித்து போட்டியிட்டே இந்த தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது. எனவே இந்த தொகுதியில் தனிக்கவனம் செலுத்துகிறது.

வருகிற தேர்தலில் இந்த தொகுதியை கைப்பற்ற பா.ஜனதாவினருக்கு அமித்ஷா வியூகம் அமைத்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது. தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர் சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார். வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news