மதுரை மத்திய சிறையில் போலீஸார் தீவிர சோதனை

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி, தண்டனை கைதி என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த கைதிகளில் சிலர் சிறைக்குள் திருட்டுத்தனமாக கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, சிறைத்துறையின் உதவி ஆணையர் வேணுகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் என 120 பேர் கொண்ட சிறைத்துறை போலீசார் மத்திய சிறையில் இன்று காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், சிறை வளாகம், கழிவறைகள், கைதிகளின் அறைகள், சமையல் கூடம் ஆகியவற்றில் சோதனை நடந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிறைக்கைதிகள் சிலர், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாக வந்த தகவலின்பேரில், இதுபோன்று திடீர் சோதனைகள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: south news