X

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு – முதலிடம் பிடித்தவருக்கு ஜீப் பரிசாக வழங்கப்பட்டது

மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது. இதில், கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த பூவந்தியை சேர்ந்த அபிசித்தருக்கு, ஜீப் உடன் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 2ம் இடம் பிடித்த வீரர்கள் தமிழரசன், பரத்குமாருக்கு பைக் பரிசாக வழங்கப்படுகிறது. இதில், சின்னப்பட்டி தமிழரசன், விளாங்குடி பரத்குமார் தலா 6 காளைகளை அடக்கி 2ம் இடம் பிடித்தனர்.

கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை கணேஷ் கருப்பையா களைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. சிறந்த காளையாக 2ம் இடத்தை திருச்சி அணைக்கரை வினோத் காளை பிடித்துள்ளது. தொடர்ந்து, சிறந்த காளையாக 3ம் இடத்தை பிடித்தது மதுரை அண்ணாநகர் பிரேம் காளை.

Tags: tamil news