மணிரத்னம் படத்தில் ஒப்பந்தமான யோகி பாபு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர்.
ரஜினி முருகன் பட இயக்குனர் பொன்ராமும் இதில் ஒரு பகுதியை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அவர் விலகியதால் அவருக்கு பதிலாக தேசிய விருது வென்ற இயக்குனர் பிரியதர்ஷன் இணைந்துள்ளார். இந்நிலையில், அவர் இயக்கும் படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.