சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு குழு (IDMC) உலகளவில் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயர்ந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் அரை மில்லியன் மக்கள் இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்றம், கலவரங்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் கனமழையால் தங்களது வாழ்விடங்களை இழந்து பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
தெற்காசியாவில் நடந்த கலவரங்கள் மற்றும் வன்முறைகளால் சுமார் 69,000 பேர் புலம்பெயர்ந்துள்ளனர். இதில் பிரதானமாக 97% அளவில் மணிப்பூரில் நடந்த குக்கி – – மெய்தேய் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 67,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகம் முழுவதும் வன்முறை மற்றும் கலவரங்களால் 68.3 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்விடங்களையும் உடைமைகளையும் இழந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களின் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெருபாலான மக்கள் இன்னும் தங்களது ஊர்களுக்கு திருப்ப முடியாமல் கையறு நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் அதிகப்படியான இடப்பெயர்வு உலக நாடுகளில் ஏற்படும் வன்முறைகளால் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளதே அன்றி இதற்கான தீர்வை எந்த நாடுகளும் யோசித்ததாகவும் அதன் மீது அக்கறை கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை என்பவதே உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை என்பவதே உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்டவர்களின் ஒருமித்த ஆதங்கமாக உள்ளது.