‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை நேரில் பாராட்டிய கமல்ஹாசன்
மலையாளத்தில் கடந்த 22ம் தேதி அன்று மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும் மஞ்சும்மல் பாய்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் உள்பட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். இந்நிலையில், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.