X

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் படத்தில் நடிக்கும் விக்ரம்

கடந்த மாதம் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகிய படம் மஞ்சும்மல் பாய்ஸ். ஒரு மாதம் முழுவதும் எங்கு திரும்பினாலும் மஞ்சும்மல் பாய்ஸ் , மஞ்சும்மல் பாய்ஸ் என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது. சமூக வலைத்தளங்களில் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாட்டு மிகவும் வைரலாகியது.

படத்தை பார்த்து பல தமிழ் பிரபலங்களான கமல், ரஜினிகாந்த, விக்ரம் , சித்தார்த் என பலர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் இதுவரை 220 கோடி ரூபாய் வசூலித்துல்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் நடிகர் விக்ரம் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனரான சிதம்பரம் இயக்கத்தில் அடுத்தப்படம் நடிக்கவுள்ளார். சிதம்பரம் தற்பொழுது மலையாளத்தில் படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை இயக்கி முடித்தப் பின் விக்ரம் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். சியான் 2024 ஆம் ஆண்டு வரிசையாக மிக சுவாரசியமான படங்களில் நடித்து வருகிறார்.

தங்கலான்,கரிகாலன், கர்ணன், கருடா, என பெரும் படங்களில் நடித்து வருகிறார். சித்தா இயக்குனர் இயக்கும் சியான் 62 படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். சியான் 62 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிதம்பரம் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.