மக்கள் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் – பிரதமர் மோடி பதிவு
மேகாலயாவில் 59 தொகுதிக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிக்குமான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேகாலயா, நாகாலாந்து மக்கள் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அனைவரும் வாக்களித்து புதிய சாதனையை படைத்திடுக எனவும் கூறியுள்ளார்.