மக்களிடம் வரவேற்பு பெற்ற ‘ஆதியா வர்மா’ பட டீசர்
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார்.
வர்மா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில், படம் கைவிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து ‘வர்மா’ படத்தின் புதிய பதிப்பை அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார்.
“ஆதித்யா வர்மா” என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்தில் துருவ் ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் பின்னணி வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஆதித்ய வர்மா படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இரண்டாவது முறையாக ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் இப்படத்தின் டீசரை பலரும் பாராட்டி வருகின்றனர்.