Tamilசெய்திகள்

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இதை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தவ் தாக்கரேயை சந்திக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.