Tamilசெய்திகள்

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கர் ராவ் சாவன் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில், 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருந்துகள் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உயிரிழந்த 24 பேர்கலில், 12 பேர் பிறந்த குழந்தைகள் என்ற தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு சுழல் தான் நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் கிடைப்பதில்லை, இதன் காரணமாகவே நோயாளிகள் உயிரிழக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில அமைச்சர் ஹாசன் முஷ்ரிஃப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறை இயக்குனர் மற்றும் ஆணையர்களை விரைந்து விசாரணை நடத்தவும், மருந்துகள் இருப்பு குறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் தொடர்புடைய அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.