X

மகாராஷ்டிராவை தொடர்ந்து மற்ற மாநில ஆட்சிகளையும் கவிழ்ப்பார்கள் – பா.ஜ.கவை சாடிய மம்தா பானர்ஜி

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார் சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே. அவர்கள் அரசுக்கு எதிராக முடிவெடுக்கும் பட்சத்தில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உத்தவ் தாக்கரே மற்றும் அனைவருக்கும் நீதி வேண்டும். இன்று நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அதனால் பணபலம், மாபியா பலத்தைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருந்து சென்றாக வேண்டும். உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம்.

இது தவறு, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மகாராஷ்டிராவிற்கு பிறகு மற்ற மாநில அரசுகளையும் கவிழ்ப்பார்கள். மக்களுக்கு நீதி வேண்டும்.

என தெரிவித்தார்.