மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் என்ற இடத்தில் இருந்து புனேவுக்கு சென்ற பேருந்து ஒன்று சம்ருத்தி மகாமர்க் அதிவேக நெடுஞ்சாலையில் பல்தானா என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். இருந்தாலும் அவர்களால் பேருந்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை. 25 பயணிகள் உயிரோடு எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. எரிந்த பேருந்தில் இருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 32 பேர் பயணம் செய்ததில் 8 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் புல்தானாவில் உள்ள மருத்துவமனயைில் சேர்க்கப்பட்டுள்ளனர்.