X

மகாராஷ்டிராவில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – 5 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து புல்தானா மாவட்டத்தில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

புல்தான் மாவட்டத்தின் மல்காபுர் நகரில் உள்ள மேம்பாலத்தில் அமர்நாத் யாத்திரை முடித்த பக்தர்கள் ஒரு பேருந்தில், ஹிங்கோலி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது நாஷிக் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, லாரியை முந்தி செல்ல முயன்றபோது, ஹிங்கோலி நோக்கி சென்ற பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags: tamil news