மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் அவான் இன்று பா.ஜ.கவில் இணைகிறார்

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான். இவர் மராத்வாடா பகுதியில் உள்ள நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மறைந்த சங்கர்ராவ் சவானும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 2010-ம் ஆண்டு அசோக் சவான் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். 2014 முதல் 2019 வரை மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார்.

இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேவுக்கு அசோக் சவான் ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். மேலும் அசோக்சவான் பா.ஜனதா கட்சியில் இணைய போவதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் இன்று அசோக் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று எனது அரசியல் வாழ்க்கையின் புதிய தொடக்கம். இன்று நான் பா.ஜ.க.வின் அலுவலகத்தில் முறைப்படி இணைகிறேன். மேலும் மகாராஷ்டிர மாநிலத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news