Tamilசினிமா

மகளுக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அஜித்தின் கதாபாத்திரம் அவரது மகள் அனோஷ்காவை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இனிமேல் பெண்களுக்கு எதிராக ஒரு கேலி, கிண்டல் காட்சிகூட தனது படங்களில் இருக்கக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார் அஜித்.

மேலும், சமீபத்தில் வெளிவந்த ‘நேர்கொண்ட பார்வை’ படமும் பெண்கள் மத்தியில் தனக்கு மிகவும் நற்பெயரை உண்டாக்கியிருப்பதை அறிந்திருக்கிறார் அஜித். ஆகையால், பெண்களுக்கு எதிரான கேலி, கிண்டல் காட்சிகள் வேண்டாம் என்பதை தன் இயக்குநர்களிடம் கறாராகவே கூறிவிடுகிறார் அஜித்.

தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காகத் தயாராகி வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வழக்கமாக ‘சால்ட் அண்ட் பெப்பர்’ கெட்டப்பில் வரும் அஜித், இந்த படத்தில் முழுக்க இளமைத் தோற்றத்தோடு வர இருக்கிறார். இது அவரது ரசிகர்களை இன்னும் கொண்டாட வைக்கும் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *