மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் – ஆர்சிபி அணியில் சானியா மிர்சாவுக்கு முக்கிய பொறுப்பு

முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஆர்சிபி அணி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் அறிவித்தது. சாயர் நியூசிலாந்து பெண்களின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் மகளிர் உலகக் கோப்பை வென்ற அணியில் உதவி பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் தொடக்கப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆலோசராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது கடைசி தொழில்முறை போட்டியாக இருக்கலாம். 36 வயதான மிர்சா, ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரும் அவரது கூட்டாளியான ரோஹன் போபண்ணாவும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், சோஃபி டிவைன், டேன் வான் நீகெர்க் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ், தொடக்க ஏலத்தில் நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்குகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools