மகளிர் தினத்தன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் மம்தா பேனர்ஜி!

பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்துவருகிறது. நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்சித்தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தலுக்கான பொதுக்கூட்டம், பிரச்சாரம் குறித்த திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பது, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உலக மகளிர் தினத்தன்று (மார்ச் 8) பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தினை தொடங்க உள்ளார்.

மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், கொல்கத்தாவின் ஸ்ரத்தானந்தா பூங்காவில் எஸ்பிளனேடு வரை பேரணி நடைபெற உள்ளது. இதில் மம்தா பங்கேற்க உள்ளார். பின்னர் எஸ்பிளனேடில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மம்தா உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி நிர்வாகி கூறுகையில், ‘பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும், நாங்கள் மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தில் பிரச்சாரத்தினை தொடங்க உள்ளோம். ஏற்கனவே கடந்த 2014ல் நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் இதே தேதியில் தான் பிரச்சாரம் தொடங்கப்பட்டது’ என்றார்.

இந்த பொதுக்கூட்டத்திற்கான திரிணாமுல் காங்கிரஸ் பதாகைகளில் ‘புதிய இந்தியா, ஒருங்கிணைந்த இந்தியா, மற்றும் வலிமையான இந்தியா’ என்பதே முக்கிய நோக்கமாக அச்சிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools